Friday, September 25, 2009

ஒற்றைவார்த்தையில்.....!


கவிதை படிக்கிறேன்
உன்னைவிட அழகாக வர்ணித்திருப்பார்களா என்பதற்காக!
பூக்களைத் தொட்டுப்பார்க்கிறேன்
உன்னைவிட மென்மையானதா என உணர்வதற்காக!
வானவில்லை ரசித்துப்பார்க்கிறேன்
உன் புருவங்களின் வளைவைவிட அழகானதா என்பதற்காக!
அமைதியான கடலலையின் ஓசையை ரசித்துக் கேட்கிறேன்
உன் சிரிப்பொலியின் ரிதம் உள்ளதா என்பதற்காக!
மல்லிகை வாசத்தை முகர்ந்து பார்க்கிறேன்
உன் சுகந்தத்தை விட சுகமா என்பதற்காக!
சிற்பங்களை கூர்ந்து பார்க்கிறேன்
உன்னைவிட அழகாக வடித்திருப்பார்களா என்பதற்காக!
குயிலின் கூவலைக் கேட்கிறேன்
உன் குரலை விட இனிமையானதா என்பதற்காக!
கானமயிலின் நடனத்தை பார்க்கிறேன்
உன் நளினம் உள்ளதா என்பதற்காக!
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்
உன்னை நினைத்து...
உன்னைவிட அழகு இருக்கின்றதா என்பதற்காக!
ஒன்றுமே அழகில்லை உன்னைத்தவிர!
ஆனால்.....
நீ மட்டும் ......
என்னை ஏன் ....
'பிடிக்கவில்லை' என்றாய்!
ஒற்றை வார்த்தையில்.......!

3 comments:

கிடுகுவேலி said...

கடைசி நான்கு வரிகளைத் தவிர மிகுதி அனைத்தையும் மிகவும் காதலுடன் ரசித்தேன். அற்புதமான வரிகள். ஆனால்
//..ஆனால்.....
நீ மட்டும் ......
என்னை ஏன் ....
'பிடிக்கவில்லை' என்றாய்!
ஒற்றை வார்த்தையில்.......!..//

நீங்கள் இப்படி எல்லாம் செய்தால்...அவள் உங்களை பிடிக்குது என்று சொல்ல வேண்டும் என்று இல்லைத்தானே. ஏனோ நான் இதனுடன் முரன்படுகிறேன். இதை நீங்கள் என்னை ஏன் பிடிக்கவில்லை என்று கேள்வியாக கேட்கலாம். ஆனால் இப்படி எல்லாம் நான் செய்கிறேன், ரசிக்கிறேன். ஆகவே உனக்கு என்னை பிடித்திருக்க வேண்டும். ஏன் பிடிக்கவில்லை? என்று கேட்கலாமா? கட்டாயம் பிடிக்க வேண்டும் என்று இல்லைத்தானே.

விரும்பி said...

கதியால் அவர்களே
உங்கள் கருத்துக்களிற்கு நன்றி
உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்.
காதலின் போது காதலிப்பவளைப்பற்றிய பதிவுகளை மனதில் பதிப்பதை விட
காதலிப்பவளின் மனதில் பதிவுகளை ஏற்படுத்தலே
காதலின்முதல் வெற்றி
இல்லாவிட்டால் ஒற்றைவார்த்தையில் பிடிக்கவில்லை என்ற சொல்லே
பதிலாக வரும்
சிலவேளை தற்கொலையும் முடிவாகும்

இது ஒருதலைக்காதலர்களின் கவனத்திற்கு

முல்லைப்பிளவான் said...

கதியாலுடன் நானும் ஒத்துப்போகின்றேன்
நீங்கள் ஓப்பிட்ட அனைத்துடனும் மேலாக உள்ளவள் தான் ஒப்பிடும் அனைத்துடனும் நீங்கள் உயர்வாக இருந்தால் தானே உங்களை அவளுக்கு பிடிக்கும் சுவாரசியமாக ஒருவான வார்த்தைகள் எனோ இறுதியில் ஒருவரியில் முடிந்து விட்டன அவளின் பதில் போன்று உங்களின் வரிகளையும் முடித்து விட்டிர்கள்.