Saturday, September 19, 2009

எங்கே தேடுவேன்???

அதிகாலை வேளை
நெஞ்சை உறையவைக்கும் - குளிர்
சுகமாய் நான் முகம் புதைக்கும்
மயிர்மெத்தைநெஞ்சு
எங்கே??
போய்விட்டார் வேலைக்கு.
தனிமையில் தொலையும் பகல் பொழுது
பொருண்மியமே மையமான புலத்து வாழ்வில்
தெலைந்து போகும் சுகங்களிவை.
என்றாலும்
மலர்ச்சி தரும் - அந்திசாயும் வேளை
வந்துவிடுவார்
வழிநோக்கி விழிகள் நிலைக்க
பொழுது நடுநிசிக்கு நகர்ந்தும்
வரவில்லை
புதிய இடம் - புரியாத மொழி
தெரியாத மனிதர்கள்
எங்கே தேடுவேன்???
இறைவா ...........

1 comment:

கிடுகுவேலி said...

தேடல்தான் வாழ்வு...காத்திருப்பும் ஒரு சுகம்தான்...ஆனால் அதற்கும் ஒரு அளவுண்டு...உங்கள் புலத்து வாழ்வு மீதான கரிசனை புரிகிறது. ஆனால் புரிந்துணர்வு உச்சமாக இல்லாதவிடத்து அது இடைவெளியையே அதிகரிக்கும்.