Sunday, September 20, 2009
கனவைக் கலைத்தவள்......???
அந்திசாயும் அழகான மாலைப்பொழுது
கரை தழுவ முயலும் அலைகளின்
இனிமையான ஓசை,
இதமாக வருடிக்கொடுக்கும் குளிர்காற்று
ஆனந்தமாக கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
திடீரென வீசிய சந்தனவாடை
என்னைத் திரும்பிபார்க்க வைத்தது.
ஒய்யாரமாக ஒரு தேவதை - எனைநோக்கி நடந்து வந்தாள்
பொறாமையால், சினங்கொண்ட கதிரவன் வேகமாக
மறைய முயல
மங்கிய ஒளியிலும் - அவளது
சந்தனநிற உடல் தகதகத்தது
காந்தபார்வையில் சிக்குண்ட எனது கண்கள்
இமைக்க மறுத்தன.
இதற்காகவே சாகலாமோ என்றெண்ணியது - மனம்
நான் பார்த்ததில் பேரழகியவள்
எனதருகே வந்தமர்ந்தாள்!
அவளது காந்தச்சிரிப்பில் சிக்குண்ட நான்
கட்டுப்பாட்டையிழந்து
அவளது கையை தொட்டுப்பார்த்தேன்.
பிறந்த குழந்தையின் மென்மை
ஆகா - என்ன அருமையான ஸ்பரிசம்
தேவதையின் மடியில்
அளவிலா ஆனந்தத்தில் சிக்குண்டு
சொர்க்கத்தில் மிதந்தபோது
தோள்பட்டையில் தட்டியது ஒருகை
என்னென்று பார்த்தேன்
தேனீருடன் நின்ற மனைவி
'கெதியா எழும்புங்கோ! கடைக்குப் போகவேணும்'.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சுற்றியிருக்கும் அழகை வர்ணித்த விதம் அழகு...
//தோள்பட்டையில் தட்டியது ஒருகை
என்னென்று பார்த்தேன்
தேனீருடன் நின்ற மனைவி
'கெதியா எழும்புங்கோ! கடைக்குப் போகவேணும்'.//
மீண்டும் பழைய நிலை...அதே மனைவி..
ம்ம்ம்....
ம்ம்ம் கல்யாணம் முடிந்த எல்லோர் ஆண்கள் கனவும் இப்படித்தானா...? அது நிஜமோ பொய்யோ என்று விவாதிக்க முன்னர்....உங்கள் கவிதை அருமை. அதுவும் அந்த காட்சிப்படுத்தல் மிகவும் நன்று....காதலித்தால் கவிதை வரும்..ஒரு பெண்ணை மட்டுமல்ல எதையுமே...!!!
ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நிதைத்ததை விபரித்தமைக்கு ஒரு சலாம்... அவள் அழகை காட்டியிருக்கும் விதம் றொம்ப அழகு! நான் நினைக்கிறேன் இப்படி ஒரு பெண்னைத்தான் விரும்புகிறார்கள் என்று....!
மனைவிமார் கவனம் உங்கள் கணவர்களும் சில வேளை...........!
Post a Comment