காற்றின் ஸ்பரிசத்தைக்கூட
ரசிக்க தெரியாத எனக்கு
காதலால் உயிர் தந்தவளே!
உயிர் மட்டுமா தந்தாய்??
உயிருக்கு உணர்வூட்டினாய்!
எனக்கே என்னை ரசிகனாக்கினாய்!
வாழ்வின் அர்த்தங்களை புரியவைத்தாய்!
இன்னும்
எத்தனை அருமையான உணர்வுகள்
எல்லாம் உன்னால்
உன்காதலால் வந்தவை
காதலால் மறு ஐனனம் தந்தவளே!
எனக்கு நீயும் ஒரு தாய்தான்.
5 comments:
"எனக்கே என்னை ரசிகனாக்கினாய்!
வாழ்வின் அர்த்தங்களை புரியவைத்தாய்!
இன்னும்
எத்தனை அருமையான உணர்வுகள்
எல்லாம் உன்னால்
உன்காதலால் வந்தவை"
இந்த வரிகள் எனக்கு மிகவும் கவர்ந்தவை.நான் அனுபவித்தவை - நன்றி தொடர்ந்து எழுதுங்கள்
அருமையான கவிதை ஆனால கடைசில் காதலியை தாய் ஆக்கிவிட்டிர்கள்
உங்கள் கவிதையின் ஸ்பரிசத்தை உணர்கிறேன்
அருமையான கவிதை
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
முல்லைப்பிளவான் said...
"அருமையான கவிதை ஆனால கடைசில் காதலியை தாய் ஆக்கிவிட்டிர்கள்"
முல்லைப்பிளவான் வணக்கம்
பூமியில் பிறப்பெடுப்பது தாயால். திசைமாறி;,நோக்கில்லாமல் இருக்கும் பலர் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்று மிளிர்வது காதலால். ஐனனம் என்பது தாய்க்குரிய பண்பு, இங்கு மறுஐனனமானது காதலியால் எனவே அவளை தாயாக உருவகப்படுத்தினேன். வாழ்க்கையில் தாயாகவும் தாரமாகவும் அணைப்பவள் என்பதால் அவளுக்கிந்த உயர்நிலையை ஆத்மார்த்தமாக வழங்கினேன்.
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மற்றும் ஏனையோரின் கருத்துகளிற்கும் - நன்றி
காதல் ஒரு பெரும் சக்தி.....அதற்குத்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. தாய்க்குப் பின தாரம் என்ற பழமொழியிலே தாரம் ஆக வருபவள் பின்னாலில் தாயாகவும் அவனை தாங்கப் போகின்றவள். அவளும் ஒருவகையில் தாய்தான்....!!!! கவிதை சுப்பர்...!!
Post a Comment