Tuesday, September 15, 2009

நிஐம் எது......?

நேற்றுவரை
என் நெஞ்சம் கவர்ந்த நாயகனாய்
உலா வந்தவனே!
இன்று மட்டும் ஏனடா
உன்
கோர முகத்தைக் காட்டினாய்
நான்
அழுதால் அழுதாய்
சிரித்தால் சிரித்தாய்
என் வேதனைகண்டு
துடியாய் துடித்தாய்
அத்தனையும் வேசமா?
உனக்கிருக்கும்
ஓராயிரம் முகங்களில்
எதுவடா
உன் நிஜமுகம்???
உனக்காக
சிலுவை சுமந்தேன்
நீயோ
சுமையை மட்டும் எனக்குத் தந்து
சுகம் சேர்த்தாய்
உன்
சுயநலத்துக்காக........

4 comments:

கிடுகுவேலி said...

நான் நினைக்கிறேன்...இது நீங்கள் ஒரு துரோகம் என்ற சகதிக்குள் சிக்குப்பட்டதால் எழுந்த உணர்வலை என. ஆனால் எழுத்து என்னை அப்படி எண்ண தோன்றினாலும் உங்கள் உள்ளக்கிடக்கையை என்னால் அறியமுடியுமா...? இருந்து தமிழினம் என்றால் துரோகம் கூடவே இருக்கும் என்பதால் நினைத்தேன்....மற்றபடி கவிதை நன்றாக உள்ளது. முயற்சிகள் தொடரட்டும்.

Punnakaimannan said...

நிஜம் என்று எதுவுமில்லை
நிழல் என்றும் யாதுமில்லை
நிஜமும் நிழலும்
அவரவர் பார்வையில் அர்த்தம் தருபவை
நிஜமென நம்பியவற்றின் நிழல்களையும்
நாம் பார்க்கத்தவறுகிறோம்

க.பாலாசி said...

//சுமையை மட்டும் எனக்குத் தந்து
சுகம் சேர்த்தாய்
உன்
சுயநலத்துக்காக........ //

நெஞ்சில் அடிக்கும் வரிகள்...

வாழ்த்துக்கள்...

அபிஷேகா said...

நிஐம் என நம்பி ஏமாந்த அபலைப்பெண்ணின் உண்மையான உள்ளக்குமுறலே இங்கு வரிகளாக வரையப்பட்டுள்ளது. வருகைதந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி