Thursday, October 22, 2009

நினைவுகளில் என்றும் அவள்!

கார்மேகம் கதிர்மறைக்க
மெல்லிய குளிர்காற்று முகம் வருடியது
அவசரத்தில் நான் வீடு நோக்கி
நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென
முகத்தை வருடிய
துப்பட்டாவை விலக்கிப்பார்த்தேன்
அழகிய கண்கள் மன்னிப்பை விழிக்க
உதடுகளைக் குவித்து
மெல்லிய சிரிப்புடன்
மன்னிப்பு கேட்டாள்
மாலை இருட்டிலும்
பிரகாசித்த அவளது
கதைபேசும் விழிகளுடன்
கதைபேச மறுத்தது விழிகள்!
தடுமாறிப்போனது இதயம்!


மோனலிசா ஒவியத்திற்கு போட்டியான
குறும்புத்தனமா என
பதில் தேடி தோற்றது மூளை
அவள் பார்வையின் வசிகரம்
கண்களின் சொர்க்கமாயின
மெலிதான சிரிப்பு
உணர்ச்சியலைகளை உருவாக்கிக்கொண்டிருக்க
கட்டிலில் புரண்டு புரண்டு படுத்த போது
அம்மா கேட்டாள் சுகமில்லையா? என்று
அசடுவழிந்தேன் ஒன்றுமில்லை அம்மா என்று

ஒரே பார்வையில் என்னை
வசீகரித்தவள்
நினைவுகளின் நிஐத்திற்காக
நினைவுகளில் அவளைச்சுமக்கின்றேன்
நம்பிக்கைதானே வாழ்க்கை!.

4 comments:

க.பாலாசி said...

//பிரகாசித்த அவளது
கதைபேசும் விழிகளுடன்
கதைபேச மறுத்தது விழிகள்!
தடுமாறிப்போனது இதயம்!//

மாட்டிகிட்டீங்கன்னு சொல்லுங்க....

//மெலிதான சிரிப்பு
உணர்ச்சியலைகளை உருவாக்கிக்கொண்டிருக்க//

உங்களுக்குமா...நல்லது....

//நினைவுகளின் நிஐத்திற்காக
நினைவுகளில் அவளைச்சுமக்கின்றேன்
நம்பிக்கைதானே வாழ்க்கை!.//

அய்யோ பாவம்....

கவிதை நன்றாயிருக்கிறது....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

உங்கள் கவிசேவை தொடர வாழ்த்துக்கள்.........

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

மாட்டின......எல்லாருக்கும்

இப்பிடித்தான்

கடைசியில பாவம்

நன்றி கருத்துகளுக்கு

விரும்பி said...

வணக்கம் உலவு

/////உங்கள் கவிசேவை தொடர வாழ்த்துக்கள்/////

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்