நீ அங்கே நான் இங்கே
யார் எம்மை சேர்த்துவைப்பார்கள்
யார் யாரோ சேர்ந்து நின்று
எம் இருவரையும் பிரித்துவிட்டார்களே
இதனால் யாருக்கென்ன லாபம் என்று
தினம் தினம் விடைதேடுகின்றேன்
இன்னும் கிடைக்கவில்லையே விடை எனக்கு
உன்னை விட்டு வந்த நாள் தொடக்கம்
என் கண்மணிகள் நிம்மதியாய் உறங்கவில்லை
உன்முகத்தின் அழகும்
நீ இறுதியாய் சிந்திய சிவப்பு நிற கண்ணீரும்
இன்னும் என் நெஞ்சில் நெருப்பாய் எரிகின்றது
இதை அணைப்பதற்கு யாருமில்லை இங்கெனக்கு!
உன்னிடமிருந்து என்னை பிரித்தவனை
எப்படி நான் எதிர்கொள்வேன் என்று
இங்கு தினம் தினம் எனக்குள்ளே திட்டமிடுகின்றேன்
உன்னை விட்டு நான் இங்கு வந்ததனால்
என்மீது உனக்கு கோபம் அதிகம்
அது எனக்கு நன்றாகத் தெரியும்
அந்த அரக்கனோடு சேர்ந்து வாழ
என்னால் முடியாது அது உனக்கு நன்றாக புரியும்
ஒன்றை மட்டும் சொல்கின்றேன்
விரைவில் நாம் இருவரும் ஒன்றாய் சேர்வோம்
அப்போது உன்னை அணைத்து முத்தமிட முடியாவிட்டாலும்
உன்மேனியெங்கும் முத்தம் தந்து
உன்மீது படுத்துறங்கும் காலத்திற்காய்
காத்துநிற்கிறேன்
நான் பிறந்த தாயக மண்ணே...!
3 comments:
அருமை.....
//அப்போது உன்னை அணைத்து முத்தமிட முடியாவிட்டாலும்
உன்மேனியெங்கும் முத்தம் தந்து
உன்மீது படுத்துறங்கும் காலத்திற்காய்
காத்துநிற்கிறேன்
நான் பிறந்த தாயக மண்ணே...!//
கடைசி வரிகளை மிகவும் ரசித்தேன்...டச்சிங்......சூப்பர்....
வணக்கம் பாலாஜி
மிக்க நன்றி
தங்களின் கருத்துக்கு
///விரைவில் நாம் இருவரும் ஒன்றாய் சேர்வோம்
அப்போது உன்னை அணைத்து முத்தமிட முடியாவிட்டாலும்
உன்மேனியெங்கும் முத்தம் தந்து
உன்மீது படுத்துறங்கும் காலத்திற்காய்
காத்துநிற்கிறேன்
நான் பிறந்த தாயக மண்ணே...!////
மிக அருமையான வரிகள் பெரும்பலான ஈழத்தமிழர்களின் உள்ள உணர்வுகளை உங்களின் வரிகக்குள் உள்ளடக்கியுள்ளீர்கள். அந்த நாள் விரைவாக வர வேண்டும் என பதற்காக அனைவரும் ஒன்றாக உழைப்போமாக.
Post a Comment