பிரசவ வலிஇருட்டு உலகத்திலிருந்து
விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம்
கருவறையின் சுகமான வேதனை - தாயக்கு
பிரசவம்
உயிரின் புதிய வரவிற்காக
உயிரைப்பணயம் வைத்து
உயிர்கள் நடத்தும் போராட்டம்
குழந்தை
இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி
சிறுவயதுவண்ணாத்து பூச்சிபோல
வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்காக
கற்றலின் ஆரம்பம்
வாலிபம்ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்
காதல்ஓமோன்களின் உந்தலில்
எதிர்பாலினரில் ஏற்படும்
ஒருவகை உணர்வின் ஈர்ப்பு
திருமணம்
சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை
தந்தைபிரசவித்தின் பரிதவிப்பு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
எனும் அனுபவிப்பின் தொடக்கக்காலம்.
தாய்உதிரத்தை உயிராக்கி - பின்
உதிரத்தை உணவாக்கி உயிர்வளக்கும்
உயர்ந்த தெய்வம்
வயோதிபம்வாழ்க்கையை மீளஅசைபோட்டு
உலகைவிட்டு புறப்பட தயாராகும்
இறுதிக்காலம்