Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Sunday, September 27, 2009

தலையணை


என்றும்
எனைத் தாங்கும் சுமைதாங்கி
உணர்வுகளை ஒட்டுக்கேட்கும்
ஓற்றன்
அரற்றல்களை சகித்துகொள்ளும்
நண்பன்
உணர்ச்சிகளின் வடிகாலான
உதவியாளன்
யாருமறியா நிஜங்களை பகிர்ந்துகொண்ட
தோழன்
கண்ணீரில் கரையும்போது துடைத்துவிடும்
அன்னை


மொத்தத்தில் என் உணர்வுகளுக்கு
உரமாய் போன ஜீவன்
இன்று
தூக்கத்தில் நான் கட்டியணைத்ததால்
என் மனைவியால்
தூக்கி எறியப்பட்டவன்
என் சுவாசத்தின் எல்லைவரை
அவளுக்கே மட்டுமானது - இது
அவளின் வாதம்
அவனுக்குத் தெரியும்
அவள் குழந்தை மனம்
ஏனெனில்
எதையும் ஏற்கும் ஜீவன் அவன்!