Sunday, October 25, 2009

முரண்பாட்டின் வினை(லை)!

கார்மேகம் சூழ்ந்து வர
கானமயில் ஆடிமகிழ
கார்குழலாள்
கடைத்தெருவில் நடைபவனிவந்தாள்.

மழைமேகம் இசைத்திட
மழைத்துளிகள் முத்தமிட்டது
மாந்தர் குடைவிரிக்க
மங்கையவள் மழையுடன் உறவாட
மழைத்துளி முகம் நனைக்க
மலர்ச்சியடைந்தது முகம்!
மலர்பாதம் மண்ணில் வைத்து
மங்கையவள்
மயில்போல் துள்ளிவிளையாடினாள்.

நங்கையவள் நளினம் பார்த்து
நானும் ரசித்து நின்றேன்
நான் நின்ற இடத்தில்
நட்டிருந்த கல் தடக்கி
நங்கையவள் நடைதளர்ந்தாள்

என்னவோ எனப்பதைத்து
எட்டிச்சென்று கைகொடுக்க
எழும்பினாள் நாணத்துடன்
எழும்பியவளின் முகம்பார்த்தேன்
என்மனமும் என்னிடமில்லை
எப்படியென்று இன்னும் புரியவில்லை.

எப்போதும் அவள் நினைப்பில்
என்னுடன் என்னவள் என
ஏங்கியிருந்த காலமெல்லாம்
எண்ணி நினைத்து
எப்போதும் மகிழ்வேன்
எல்லாக்கருத்தும்
எம்முள்ளே இணங்கிப்போக
என்னுடைய நாத்தீக கொள்கையையும்
எடுத்தியம்பினேன் எதிர்பார்ப்புடன்

ஒன்றில் மட்டும் ஒத்துப்போகவில்லை
ஒத்துப்போக முயன்றோம்
ஒத்துப்போக வேண்டுமெனில்
ஒருவர் கொள்கையை ஒருவர் விடவேண்டும்
ஒத்துப்போக முடியவில்லை – அதனால்
ஒத்துப்போய் பிரிந்து விட்டோம்
ஒத்துப்போகாத தத்துவங்களைப்போல

அவரவர் வாழ்க்கையில் சுதந்திரமாக
ஆழ்மனத்தில் காதல் வலிகள்
அம்மா பெண்பார்த்தாள்
ஆம் என்று தலையாட்டினேன்
நினைத்தது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நினைத்து சந்தோசப்படு - என
எனக்கு நானே சமாதான தூதுவரானேன்

அமைதியாக ஓரிடத்தில்
அன்பர்கள் ஒன்றினைந்து
அமைதியான திருமண ஏற்பாடு
அவளும் வந்தாள்
அதிர்ச்சியுடன் நான் விழிக்க
அம்மா சொன்னாள் பெண்ணின் அக்காவென்று
அறைந்தது போலிருந்தது
அண்டமே சுழன்றது
ஆண்டவா! என்றேன்
என்னையறியாமல்

6 comments:

ரோஸ்விக் said...

//அமைதியான திருமண ஏற்பாடு
அவளும் வந்தாள்
அதிர்ச்சியுடன் நான் விழிக்க
அம்மா சொன்னாள் பெண்ணின் அக்காவென்று
அறைந்தது போலிருந்தது
அண்டமே சுழன்றது
ஆண்டவா! என்றேன்
என்னையறியாமல்//


நெஞ்சில் அறைந்த வரிகள்.....கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்...கலக்குங்க...


http://thisaikaati.blogspot.com

க.பாலாசி said...

//மலர்பாதம் மண்ணில் வைத்து
மங்கையவள்
மயில்போல் துள்ளிவிளையாடினாள்.//

அழகான வாக்கியங்கள்.

//அவரவர் வாழ்க்கையில் சுதந்திரமாக
ஆழ்மனத்தில் காதல் வலிகள்
அம்மா பெண்பார்த்தாள்
ஆம் என்று தலையாட்டினேன்
நினைத்தது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நினைத்து சந்தோசப்படு - என
எனக்கு நானே சமாதான தூதுவரானேன்//

அட ஆமாங்க....வேறென்ன பண்றது....

மோனையுடன் கூடிய உங்களின் கவிதை ரசனையுடன் இருக்கிறது.

விரும்பி said...

வணக்கம் ரோஸ்விக்

///நெஞ்சில் அறைந்த வரிகள்...///

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

///மோனையுடன் கூடிய உங்களின் கவிதை ரசனையுடன் இருக்கிறது///

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு

கிடுகுவேலி said...

//....ஒருவர் கொள்கையை ஒருவர் விடவேண்டும்
ஒத்துப்போக முடியவில்லை – அதனால்
ஒத்துப்போய் பிரிந்து விட்டோம்
ஒத்துப்போகாத தத்துவங்களைப்போல...//

ம்ம்ம்....இவைகள் காதலில் வந்ததால் பிரிந்தீர்கள். கல்யாணத்தின் பின் வருவதால் நிறைய பிரச்சினைகள். அதில் உளப் பிரச்சினையே அதிகம். இவைகள்தான் இப்பொழுது “லிவிங் ருகெதர்” என்ற கருவை நோக்கி பயணிக்க வைக்கின்றது. வலிமையான வார்த்தைகள் கொண்டு வடிக்கப்பட்ட வரிகள். அருமையாக உள்ளது. தொடரட்டும் வாழ்த்துக்கள்...

விரும்பி said...

வணக்கம் கதியால்

///இவைகள் காதலில் வந்ததால் பிரிந்தீர்கள். கல்யாணத்தின் பின் வருவதால் நிறைய பிரச்சினைகள். அதில் உளப் பிரச்சினையே அதிகம். இவைகள்தான் இப்பொழுது “லிவிங் ருகெதர்” என்ற கருவை நோக்கி பயணிக்க வைக்கின்றது. வலிமையான வார்த்தைகள் கொண்டு வடிக்கப்பட்ட வரிகள். அருமையாக உள்ளது. தொடரட்டும் வாழ்த்துக்கள்...////


அருமையான கருத்துக்கள்

நன்றி