Tuesday, October 27, 2009

வாழ்க்கைச்சக்கரம்

பிரசவ வலி

இருட்டு உலகத்திலிருந்து
விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம்
கருவறையின் சுகமான வேதனை - தாயக்கு




பிரசவம்

உயிரின் புதிய வரவிற்காக
உயிரைப்பணயம் வைத்து
உயிர்கள் நடத்தும் போராட்டம்




குழந்தை

இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி




சிறுவயது

வண்ணாத்து பூச்சிபோல
வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்காக
கற்றலின் ஆரம்பம்





வாலிபம்

ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்




காதல்

ஓமோன்களின் உந்தலில்
எதிர்பாலினரில் ஏற்படும்
ஒருவகை உணர்வின் ஈர்ப்பு





திருமணம்

சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை





தந்தை

பிரசவித்தின் பரிதவிப்பு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
எனும் அனுபவிப்பின் தொடக்கக்காலம்.





தாய்

உதிரத்தை உயிராக்கி - பின்
உதிரத்தை உணவாக்கி உயிர்வளக்கும்
உயர்ந்த தெய்வம்





வயோதிபம்

வாழ்க்கையை மீளஅசைபோட்டு
உலகைவிட்டு புறப்பட தயாராகும்
இறுதிக்காலம்

6 comments:

கிடுகுவேலி said...

அருமையான முயற்சி...இது உங்களை இன்னுமொரு பரிமானத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள்...!!! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!!

//..

இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி..//

படு இயல்பானதும் யதார்த்தமானதுமான வரிகள். வார்த்தைகளில் இருந்தே கண்டு கொள்ளலாம் இது ஒரு ஈழத்தவன் எண்ணங்கள் என்பது.

விரும்பி said...

வணக்கம் கதியால்

///அருமையான முயற்சி...இது உங்களை இன்னுமொரு பரிமானத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள்///

நன்றி கருத்துக்களுக்கு

க.பாலாசி said...

//குழந்தை
இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி//

சுதந்திரமாய்.....

தாயைப்பற்றிய வரிகள் நான் ரசித்தது.

ஆரம்பம் முதல் இறுதிவரை அழகாய் வடித்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள்...

முல்லைப்பிளவான் said...

அருமையான வடிப்பு. ஒவ்வொர கட்டங்களிலும் நிகழும் உண்மையினை வடித்துள்ளீர்கள்.
//ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்//

//சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை//

எனக்கு பிடித்த வரிகள்.

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

///தாயைப்பற்றிய வரிகள் நான் ரசித்தது.///

///ஆரம்பம் முதல் இறுதிவரை அழகாய் வடித்துள்ளீர்கள்///

நன்றி கருத்துக்களுக்கு

விரும்பி said...

வணக்கம் முல்லைப்பிளவான்

///அருமையான வடிப்பு. ஒவ்வொரு கட்டங்களிலும் நிகழும் உண்மையினை வடித்துள்ளீர்கள்.///

நன்றி கருத்துக்களுக்கு