Sunday, October 25, 2009

காப்பிடம்

காப்பகம்

இயந்திர வாழ்க்கையில்
பொருளாதார பூச்சிகளாக
சுருண்டுபோன உறவுகளிடம்
அன்புக்கு ஏங்கும்
குழந்தைகளும்
முதியோரும்
என்னிடத்தில்!


காப்பகம் - மகன்

சிறுவயதில் நான்
முதுவயதில் நீ
நேரமில்லை அப்போது உனக்கு
இப்போது எனக்கு
காலச்சுழற்சியை பார்த்தாயா?


காப்பகம் - தாய்

தோளில் சுமந்து
பாலூட்டி - திசைகாட்டியாய்
வழிநடத்தியவள்
வழிமேல் விழிவைத்து
வரவுக்காய் காத்திருக்கின்றாள்
காப்பகத்தில்!

2 comments:

முல்லைப்பிளவான் said...

//சிறுவயதில் நான்
முதுவயதில் நீ//
//அப்போது உனக்கு
இப்போது எனக்கு//

இன்று உலகம் உள்ளம் கைக்குள் வந்தது உண்மைதான் உறவுகள் இப்படித்தான் உள்ளன. இது தான் நாளை நமக்கும்.

விரும்பி said...

வணக்கம் முல்லைப்பிளவான்

////இன்று உலகம் உள்ளம் கைக்குள் வந்தது உண்மைதான் உறவுகள் இப்படித்தான் உள்ளன. இது தான் நாளை நமக்கும்/////


மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு