Friday, October 16, 2009

தீபாவளி நாளில்.....................!

முற்றத்து மல்லிகை தன் இதழ்களால் புன்முறுவல் பூக்க
நறுமணம் பரவுகின்றது - என் இல்லமெல்லாம்
தீபத்திருநாளாம் என்பதனால்
முழுகிய கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட
என் மனையாள் இல்லமெல்லாம்
சாம்பிராணி காட்டுகின்றாள் !!!
மூத்தவளோ முழுகியிட்டு வாங்கோப்பா
கோணேசர் கோயிலுக்கு போவம் என்றாள்
இளையவனே பட்டாசு வாங்கித்தா வென்று பம்பரமாய் சுற்றுகின்றான் !!!
என் அம்மாவோ
கௌரிகாப்பொடுக்க போகவேணும்
காளியாச்சி கோயிலுக்கு கார்பிடிச்சு வாவென்றார்!!
அப்பா மட்டும் வழமைபோல்
சாப்பாடு போடெனக்கு
வயலுக்கு போகவெணும்
வரப்புவேலை கிடக்கென்றார்;!!!
என்ன செய்வதென்று எனக்கொன்றும் புரியவில்லை
கார் பிடிக்க போவமென்று கால் சட்டை போட்ட போது
என் கால்கள் நனைகின்றது !!!
என்னவென்று திகைத்தெழுந்தேன்
மழைநீர் வந்தது கூடாரத்துக்குள்
மண்வெட்டியை எடுத்தேன்
அணை போட!!!
பக்கத்துக் கூடாரங்களிலும்
இதே சலசலப்பு
முட்கம்பியடித்த எம் அகதிமுகாமெல்லாம்!!!

4 comments:

முல்லைப்பிளவான் said...

இதுமுட்கம்பிகளுக்குள் வாழும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் நியம்.
ஆனால் முட்கம்பி வேலிகளுக்கு வெளியிலும், புலத்திலும் வாழும் பல ஈழத்தமிழர்கள் இந்த நியத்தினை புரிந்து கொண்டு எம் உறவுகளை மீட்க செயற்பட வேண்டும்.

கிடுகுவேலி said...

அந்த மக்களுக்கெல்லாம் இது தீபா’வலி’தான்............!!! வார்த்தைகளூடே...வாழ்வின் வலிகள்..!

திருமலைச்சீலன் said...

வணக்கம் முல்லைப்பிளவான்

அற்புதமான கருத்துக்கள்

நன்றி தங்களின் கருத்துக்கு

திருமலைச்சீலன் said...

வணக்கம் கதியால்

///அந்த மக்களுக்கெல்லாம் இது தீபா’வலி’தான்............!!! வார்த்தைகளூடே...வாழ்வின் வலிகள்..!///

நன்றி தங்களின் கருத்துக்கு