தமிழ்நாட்டின் சுப்பர் ஸ்டார் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்,பணம், புகழ், செல்வாக்கு போன்ற எல்லாவற்றைப் பெற்றிருந்தும், இமயமலையில் உள்ள பாபாவின் குகைக்கு கடினமான பாதையில் பயணித்து, அமைதியான தியானம் செய்கின்றார் என்பதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் என்ன?
ஆண்டவனை அடைய வேண்டுமானால், முதலில் பணம், புகழ், செல்வாக்கு போன்ற நிலையற்ற இச்சைகளில் இருந்து விடுபட்டு இறைவனை நோக்கி தியானம் செய்தல் வேண்டும். ஆனால் பணமே மையப்பொருளாகிவிட்ட இந்த உலகத்தில் எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கத்தில், அநியாயங்களையும் பித்தலாட்டங்களையும் ஏமாற்று வேலைகளையும் இன்றைய மனிதன் செய்து கொண்டிருக்கின்றான். உயிர்காக்கும் மருத்துவத்துறையிலிருந்து கல்வித்துறை வரை எல்லாவற்றிலும் பணம். பணம் மட்டுமே இலக்காகக் கொள்ளப்படுவதால் எவ்வளவு பேர் சிரமப்படுகின்றார்கள். மனிதாபிமானம் செத்து பண அபிமானம் மேலோங்கிச் செல்கின்றது. இதனால் தானோ என்னவோ 'கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஐமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஐமானன் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடு' என்பனூடாக பணம் எஐமானன் ஆனால் மனிதம் செத்துவிடும் தத்துவத்தைச் சொல்லியிருக்கின்றார்.
எளிமை, கருணை, ஆன்மீகம் போன்றவற்றின் தற்கால வாழும் உதாரணம் ரஜினி. அவரிடம் எவ்வளவோ வசதிவாய்ப்புகளிருந்தும் பாபா குகையை நோக்கி ஒரு சாதாரண மனிதனாக, ஆபத்துகள் நிறைந்த பாதையில் செல்லும் காட்சியைப் பார்க்கும் போது பிரமிப்பாகவே இருக்கின்றது. 'வாழ்க்கை என்பது இதுதான்' என்பதை இயல்பாக எடுத்துக்காட்டும் ஒரு வாழும் உதாரண புருசனாக, ஏன் இச்சமூகத்திற்கு நல்லவிடயங்களை சொல்ல வந்த அவதாரமாகவோ, ஆட்கொள்ளப்பட்ட மனிதனாகவோ ரஜினி தெரிகின்றார். ஆன்மீகச் சிந்தனைவாதியாகவும் தீர்க்கதரிசியாகவும் மட்டுமல்லாமல் பல்லாயிரம் மக்களை குறிப்பாக இளைஞர்களைக் கவரக்கூடிய தெய்வீகசக்தியுள்ள அவரை ஒரு வகையில் 'ரஜினிபாபா' என்றே அழைக்க தோன்றுகின்றது.
எளிமையான மனிதரான ரஜினியின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றிய விவாதங்களுக்கு அப்பால், மனித வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் நோக்கும் போது , ஆசைகளிலிருந்து விடுபட்ட ஆன்மீகம்தான் வாழ்வின் நிறைவு. இவரைப்போல வாழும் உதாரணபுருசர்கள் வாழும் காலத்தில் அவர்களின் கருத்தை உள்வாங்கி, பின்பற்றி மனிதநேயம் மிக்கவர்களாக மட்டுமல்லாமல், செல்வாக்கினாலும் அதிகாரத்தினாலும் அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைத்து பாவங்களைச் செய்யாமல் குறைந்தது மனிதனாகவாவது வாழ வேண்டும். எல்லோரையும் மதித்து, அன்புசெலுத்தி மனிதம் தழைத்தோங்கச் செய்யவேண்டும் என்பதே ரஜினியின் பயணம் சொல்லித்தரும் வாழ்வியல் செய்திகள்.
15 comments:
100% Truth
ரொம்ப அப்பாவியா இருக்கீங்க?
ரஜினி அவ்வ்வ்வளவு ஆன்மிகவாதியா? அப்படி என்றால் தன் சம்பளத்தை 25 கோடியில் இருந்து 5 கோடிக்கு குறைத்து கொள்ளலாமே? தனது துறையான சினிமாவில் ஏதாவது வித்தியாசமாகவும் தரத்தை மேம்படுத்தவும் பிரகாஷ்ராஜ் மாதிரி சினிமா எடுக்கலாமே? அவர் செய்ததெல்லாம் ஆஷ்ரம் என்ற பணக்கார வர்க்கத்தின் பள்ளி ஒன்றே. ராகவேந்திர கலையான மண்டப வருமானம் எங்கே செல்கின்றது என்று இன்னும் தெரியாத நிலை.
தன் சம்பளத்தில் இருந்து விஜயகாந்த் அளவிற்காவது தான தருமம் செய்யலாமே? எத்தனை அன்னதானம், எத்தனை இதர தரும காரியங்கள், ரஜினி எதையாவது செய்ததாக செய்தி உண்டா? (வெளியே தெரியாமல் செய்கிறார் என்ற சப்பைக்கட்டு வேண்டாம், ரஜினி தும்மினாலே செய்தியாகிற மாநிலத்தில், அவர் உதவி செய்தால் அது கவர ஸ்டோரிதான் )முதலில் தன் ரசிகர்களை சந்திக்கட்டும் பிறகு அவரது ஆன்மீகத்தை போற்றுவோம்.
வித்தியாசமான ஒரு பார்வை....!
ஆண்மீகம் என்ற கோணத்தில் நீங்கள் கதைப்பதால் ரஜினி பாதை சரி என்று அதன் வழி நாங்களும் செல்லலாம். ஆனால் நிறைய இடங்களில் முரன்பாடு இருக்கிறது. அவருடைய வசதி, பிரபல்யம் என்பனதான் அவரை இமயமலைக்கு தள்ளுகிறது. இல்லாவிட்டால் ஒரு மரத்தடி வைரவரோடு நின்றுவிடுவார். ‘சுனாமி’ தாக்கிய போது ரஜினியின் உதவி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஆன்மீகவாதியாக இருந்தால் நிறைய மக்களுக்காக சாதிச்சிருக்கலாம்.
தெளிந்த நீரோடையில் போல் இருக்கும் உங்கள் பதிவில், கல் எறியும் காமிடி பின்னூட்டங்களை பார்க்க வந்தேன், ஆனாலும் பதிவு அருமை.
Mathu, maathu endu ellam anupavisuddu , eppo malaikku poraar, ethillai enna aanmegam eruku?
வணக்கம் கோகுல்
சிலவேளை நான் அப்பாவியோ தெரியவில்லை என்றாலும் ரஜினி இறைவனைத்தேடி இமயமலை நோக்கி செல்லும் ஆன்மீகப்பயணம் பற்றிய செய்தியிலிருந்து அவருடைய கருத்துக்கள் தொடர்பான நீண்ட நாள் பார்வையிலிருந்து நான் புரிந்ததை பதிவாக்கினேன். நீங்கள் குறிப்பிட்டதில் நான் அவரது தொழில், தனிப்பட்ட விடயங்களிலிருந்து விலகி ஆன்மீகத்தைபற்றி மட்டுமே பதிவு செய்தேன்.
தவிர
///முதலில் தன் ரசிகர்களை சந்திக்கட்டும் பிறகு அவரது ஆன்மீகத்தை போற்றுவோம்///
நீங்கள் குறிப்பிட்ட இக்கருத்திலிருந்து அவரிடம் போற்றுவதற்குரிய ஆன்மீகச்சிந்தனை உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நன்றி
ரசிகர்களை சந்திக்கவில்லையென்பதையும் அவரது ஆன்மீக கருத்தையும் இணைத்து பார்ப்பது உசிதமல்ல
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
விரும்பி,
//நீங்கள் குறிப்பிட்டதில் நான் அவரது தொழில், தனிப்பட்ட விடயங்களிலிருந்து விலகி ஆன்மீகத்தைபற்றி மட்டுமே பதிவு செய்தேன்.//
இதுதான் எனது பார்வையில் தவறு என்கிறேன். தனிப்பட்ட விஷயங்களும் ஆன்மீகமும் வேறு வேறாக பார்ப்பதால் வரும் கோளாறு இது. பிரேமானந்தா சில பெண்களை கற்பழித்து அவரது தனிப்பட்ட விஷயம், அவரது ஆன்மிகம் போற்றத்தக்கது என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா? அது போலதான் இதுவும்.
ரஜினியின் ஆன்மிகம் பற்றி பேசும்போது, நீங்கள் குறிப்பிட்ட ஒரு பாடல்
//'கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஐமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஐமானன் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடு//
இதை தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறாரா? இப்படி கழுத்து வரைக்கும் காசு இருப்பது ரஜினிக்கா அல்லது அதை பார்க்கும் பெரும்பாலான ரசிகருக்கா? அவரின் பணம் அவரது சொந்த உழைப்பில் இருந்து வந்தது , அதை நான் தவறு சொல்லவில்லை ஆனால் ஏன் இந்த போலி அறிவுரை? நீ என்னை போல உழைத்து முன்னேறு, தொழிலில் வித்தியாசமாக யோசித்தால் உயரலாம் என்றெல்லாம் அறிவுரை சொன்னால் அதற்கு அவர் தகுதியானவர் , ஆனால் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் நல்லதில்லை என்று சொன்னால் அதற்கு அவர் தகுதியானவர் கிடையாது.இந்த சுயமுரன்பாட்டையே நான் சொல்கிறேன்.
நியாயமான கருத்துக்கள் கதியால்!
நடைமுறையில் ஆன்மீகப்பாதை ஒவ்வொருவரைப் பொறுத்தும் வேறுபடுகின்றது. பணம், புகழ் செல்வாக்கு அனைத்தும் கிடைத்த பலர், அதுவே வாழ்வின் நிறைவு எனக்கருதி மேலும் அவற்றைச் சேர்ப்பதற்கே காலத்தைக் கழிப்பர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. எண்பத்தைந்து வயதிலும் பொருள், புகழுக்காக வாழும் மனிதர்கள் மத்தியில், நிறைந்த கஷ்டங்களை அனுபவித்து அவர் சென்ற பயணம்தான் ஒரு பாடமாகத் தெரிகின்றது. அத்துடன் செல்வாக்கு நிறைந்த ஒரு பணக்காரன் கடினங்கள் நிறைந்த பாதையை சாதாரணமாய ஏற்றுக் கொண்டதுதான்
//அவருடைய வசதி, பிரபல்யம் என்பனதான் அவரை இமயமலைக்கு தள்ளுகிறது. இல்லாவிட்டால் ஒரு மரத்தடி வைரவரோடு நின்றுவிடுவார்.//
வசதி பிரபல்யம் தான் விளம்பரத்தை கொடுக்கின்றதே தவிர சாதாரண மனிதர்கள் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு இமயமலை செல்லவில்லை என்றா சொல்கிறீர்கள். பல ஞானிகள் வறுமைப்பட்டவாகள் என்றுதானே வரலாறு கூறுகின்றது
ரஜினி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர். அண்மையில் கமலின் 50 வருட நிறைவுவிழாவில இவ்வளவு பிரபல்யமான ரஜினி தன்னை தாழ்த்தி கமலைபாராட்டிய விதம் என்பது தனது புகழ் செல்வாக்கு என்பவற்றிற்கு அப்பால் மனிதனாக உரையயாற்றியிருந்தார் இந்த பெருந்தன்னம் எவ்வளவு பேருக்கு வரும். இப்படி பல விடயங்கள் அவரிடமிருந்து கற்ற வேண்டும்.
///'சுனாமி' தாக்கிய போது ரஜினியின் உதவி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஆன்மீகவாதியாக இருந்தால் நிறைய மக்களுக்காக சாதிச்சிருக்கலாம்///
பொதுவாக இறைவனிடம் கேட்டு எதாவது கிடைக்கும் என்ற மனநிலையில் பழக்கப்பட்டதால் எதாவது கொடுத்தால் தான் கடவுள் , என்று பழகிவிட்டோமோ என தோன்றுகின்றது. கொடுப்பதால் மட்டும் பெரியவனாக முடியாது. உதவி வேறு ஆன்மீகம் வேறு நண்பரே
நன்றி வருகைக்கும் கருத்துகளுக்கும்
பெயர்தெரியா நண்பரே
இச்சைகளிலிருந்து விடபடுவது இரண்டுவகை. ஒன்று துறவறம் மற்றையது வாழ்கையினூடாக விடுபடுதல்.
ரஜினிக்கு கிடைத்தது இரண்டாவது வழி அது இயற்கை. துறவறத்தை விட வாழ்கையிலிருந்து ஆன்மிகத்திற்கு மாறுவது சாதாரணவிடயமல்ல.
நன்றி வருகைக்கும் கருத்துகளுக்கும்
வணக்கம் சிங்கக்குட்டி
தங்கள் நேக்கம் நிறைவேறியதே என்னவே தெரியவில்லை
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
வணக்கம் கோகுல்
///தனிப்பட்ட விஷயங்களும் ஆன்மீகமும் வேறு வேறாக பார்ப்பதால் வரும் கோளாறு இது.///
தூய்மையான தனிப்பட்ட வாழ்க்கை ஆன்மிகத்திற்கு அடிப்படை ஒப்புக்கொள்கின்றேன். ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை கேள்விக்குட்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தனது தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை செலவழித்தல் தொடர்பான விடயத்தையும் ஆன்மீகத்தையும் சேர்த்துப்பாக்க முடியாது. அதேவேளை உதவி செய்யவில்லை என்றும் கூறமுடியாது.
மற்றும்
///பிரேமானந்தா சில பெண்களை கற்பழித்து அவரது தனிப்பட்ட விஷயம், அவரது ஆன்மிகம் போற்றத்தக்கது என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா///
யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அத்தகவல் வெளிவரும் வரை அவரது ஆன்மீகம் போற்றப்பட்டது உண்மை
ரஜினியின் தனிப்பட்ட வாழ்வில் சட்டத்திற்கு முரணான, நியாயப்படுத்தப்பட்ட தவறான செயல்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல், ஆதாரங்களைக் காண முடியவில்லை. எனவே எனக்கு தெரியாத விடயத்தில் ஒத்துப்போவது நன்றன்று
இதுவரை, ஈழத்தமிழர்களிற்கான உதவிநிதி உட்பட பல உதவிகளை செய்ததாக பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்டேன்.
மிக்க நன்றி தங்களின் ஆரோக்கியமான கருத்தூட்டலுக்கு
வணக்கம் அருள்
நன்றி
வருகைக்கும் கருத்துக்கும்
நல்ல பதிவு,
கதியால், கோகிலன், பெயர் குறிபிபடதா நண்பர்கள் குறியதுதொடர்பில்
ரஜனி அரசியலுக்கு வரவுமில்லை, ஆன்மிகத்தினை ஏனையவர்களுக்கு போதிக்கவும் இல்லை.
அவர் தான் உழைக்கின்றார், தனது திருப்பதிக்கு எற்ற வழியில் செலவழிக்கிறார் இது அவரது விருப்பம். ஆனால் ரஜனி மற்றவர்கள் போன்று தனது சுயத்தினை இழக்கமல் தனது சுயத்திலேயே எளிமையாக வலம்வருகின்றார் என்பதுதான் அவரை இவ்வளவு மதிப்பில் வைத்திருக்கின்றது என நினைக்கின்றேன்.
வணக்கம் முல்லைப்பிளவான்
நன்றி தங்களின் யதார்த்தமான பின்னுட்டலுக்கு
ரஜனி ஒரு நல்ல நடிகர் , எல்லா விஷயத்திலும் , இதிலும் தான்.
ஆன்மிகத்தின் அரிச்சுவடியே வெட்டி விளம்பரங்களை ஒதுக்குவதுதான் ,
பாவம் பாபா .........நான் சொல்லுவது ஒரிஜினல் பாபா அவர்களை .
Post a Comment