Tuesday, October 6, 2009

நிஐங்கள்



காதலில்

செங்கதிர் பரப்பிவர
பனித்திரை விலகியது
பளிங்குச்சிலை போல் உருவம்
ஒய்யாரமாய் நடந்துவர...!
என சிந்தனையிலிருந்த அவளை
வடித்தேன் வரிகளில்
என்னைப்பார்த்த நண்பன்
நகைப்பாய் சிரித்தான்
காதலென்றால் புரியுமா? என்றேன்
அவனிடம்
நினைத்துப்பார்க்கவே நேரம் போதாதிருக்கும் இப்போது
நேரமிருந்தும் நினைக்கமாட்டாய்
மனைவியான பின்! என்றான்
சிரித்தபடி! என்னிடம்
நிஐங்கள் புரியவில்லை
காதலியின் கற்பனையில் நான்!


மறந்தவிடு - அவள்

துடிக்க மறந்த இதயம்
உணவை மறந்த வயிறு
ரசிக்க மறந்த மனம்
தூங்க மறந்த விழிகளில்
கண்ணீர்
ஏன்?
மறந்துவிடு என்றவள் சொன்னதால்!


மறந்துவிடு - அவளை

மறந்து விடு என்றார்கள்
மறப்பதற்கு முயல்கின்றேன்
மறந்து விட்டாயா? என
மாறி மாறி கேட்டு
மறக்க சொன்னால்
மறப்பது எப்படி! இலகுவில்
மறக்க கூடிய நினைவுகளா அவை!

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நினைத்துப்பார்க்கவே நேரம் போதாதிருக்கும் இப்போது
நேரமிருந்தும் நினைக்கமாட்டாய்
மனைவியான பின்! என்றான்
சிரித்தபடி! //

செம்ம...

கிடுகுவேலி said...

//..
மறந்து விடு என்றார்கள்
மறப்பதற்கு முயல்கின்றேன்
மறந்து விட்டாயா? என
மாறி மாறி கேட்டு
மறக்க சொன்னால்
மறப்பது எப்படி!...//

காயம்பட்ட இதயத்தின் வரிகள் போல கனதியாகவே உள்ளது. எதையும் எவராலும் “மறக்க” முடியாது. வேண்டும் என்றால் “மறைக்க” முடியும்.

விரும்பி said...

பிரியமுடன் வசந்த், கதியால் அவர்களே

தங்கள் வருகைகளிற்கும் கருத்துகளிறகும் நன்றி

அபிஷேகா said...

கதியால் அவர்களே

//காயம்பட்ட இதயத்தின் வரிகள் போல கனதியாகவே உள்ளது. எதையும் எவராலும் “மறக்க” முடியாது. வேண்டும் என்றால் “மறைக்க” முடியும்.//

அழமான கருத்துள்ள அனுபவ வரிகள்

நன்றி

karthik said...

மறந்து விடு என்றார்கள்
மறப்பதற்கு முயல்கின்றேன்
மறந்து விட்டாயா? என
மாறி மாறி கேட்டு
மறக்க சொன்னால்
மறப்பது எப்படி!...//

கால நகர்வில்
மறைக்கப்பட்ட ஒன்று....
மறக்கப்படாமல்
புதைக்கப்படுகின்றது!!
ஆழ்மனங்களில்
அழிக்கப்படாமல்!

நிறைய விடயங்களை மறக்க விரும்பி
முடியாமல் இழந்து விடுகின்றோம்
நிகழ்கால சந்தோசங்களையும்

இதுதான் நிஜம் இல்லையா???

விரும்பி said...

பொன்னி அவர்களே!

//கால நகர்வில்
மறைக்கப்பட்ட ஒன்று....
மறக்கப்படாமல்
புதைக்கப்படுகின்றது!!
ஆழ்மனங்களில்
அழிக்கப்படாமல்!//


நிஐமான ஆழமான கருத்துக்கள்

வருகைக்கும் கருத்துக்கம் நன்றி