Sunday, November 1, 2009

காதல் கணக்கு (?)

கள்ளங்கபடமில்லா மௌனத்தில்
கண்ணை பார்த்தேன் அவளை கணக்குப்போட!
அமைதியான பார்வையின் கூர்மையில்
கணக்குப்போட முயன்ற போது
தோற்றுப்போனது எனது கணக்கு
என்னடா கணக்கை தப்பாய் போடுகிறாய்
ஆசிரியர் தலையில் குட்டியது
நினைவிற்கு வந்தது

அவளின் மௌனத்தை கலைத்து
'கணக்கு' பண்ண கணக்குப்போட்டேன்
அவளின் கடைக்கண் பார்வையை
என்மேல் விழுத்தினால் கணக்குப்பண்ணலாம்;
என எண்ணியது மனது
பலன்; கிடைத்தது சில நாட்களில்
அவளின் நிசப்தமான கண்களில்
தென்பட்ட பூரிப்பில் எனது கணக்கு
சரியாயிற்று சந்தோசப்பட்டேன்
வாத்தியாரிடம் சொல்லமுடியாது
இது கல்விக் கணக்கல்ல
காதல் கணக்கு

சலனமற்ற பார்வை
முத்தாய் வாயிலிருந்து வரும்
சில வரிகள்
பேசாமடந்தையாயிருந்தாலும்
அடக்கமான குணம்
அளவான பேச்சு – வெகுவாக கவர்ந்தது
அழகான காதலைக் கொடுத்த
இறைவனுக்க நன்றி சொன்னேன்

வாழ்க்கைப்பந்தத்தில்
அமைதியாக கழிகின்றன பொழுதுகள்
வேலை வீடு மளிகைக்கடை என
வேகமாக ஒடியது வாழ்க்கை

நீண்ட நாட்களின் பின்
எனைக்கண்ட நண்பன்
எப்பிடியிருக்கு வாழ்க்கைக் கணக்கு என்றான்
மௌனமாக அவனைப் பார்த்தேன்
நான் மௌனியானதை கூறமுடியாமல்
மௌனமாக சிரித்து விட்டு நகர்ந்தேன்
எப்படிச்சொல்வது எனது கணக்கு
என்னை மௌனியாக்கிவிட்டதென்று

7 comments:

கவி அழகன் said...

நன்றாக உளது

முல்லைப்பிளவான் said...

கணக்குகள் நன்றாக உள்ளது.
தொடரட்டும் உங்கள் கணக்குகள்.
வளரட்டும் மடங்குகளாக உங்களது கவிதை கணக்குகள்.
வகுக்கும் போது மீதம் இல்லாத கணக்குகளாக
கூட்டும் போது நன்மை அடையக்கூடிய கணக்குகளாக
கழிக்கும் போது அழிபடாத கணக்குகளாக.
என்றும் கணக்குகலாக வாழ்க்கை கணக்கு இல்லை என்பதை
நன்றாக கணக்கு உரைத்துள்ளீர்கள்.

விரும்பி said...

வணக்கம் கவிக்கிழவன்

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும

விரும்பி said...

வணக்கம் முல்லைப்பிளவான்

கணக்குக்கு கணக்காக கணக்குப்பண்ணி
கணக்குப் போட்ட உங்களின்
அனுபவக்கணக்கை கணக்காக கவிதையில் சொன்னதற்கு
கணக்கற்ற நன்றிகள்


மிக்க நன்றி கருத்துக்களுக்கு

நயன்தாரா காதல் said...

வாழ்க்கை கணக்கு என்பதே ஒரு தனி கணக்கப்பா
அதுவும் எங்களை மாதிரி ஆட்களை கணக்கு போடுவது என்டல் .....................?????????????????

autocar said...

thanks for sharing

விரும்பி said...

வணக்கம் நயன்தாராவின் காதல்
வணக்கம் ஓட்டோகார்

நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்களிற்கும்